 June 17, 2017
June 17, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                அஜீத்தை வைத்து இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
“ரஜினி முருகன்” படத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, ஸ்டூடியோ க்ரீன் சிவகார்த்திகேயனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக வழங்கி உதவி செய்தது.
அதற்காக அந்தத் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மாறிப்போனதால், ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்காமல் தள்ளிபோட்டு கொண்டே இருந்தார்.
அதன்பிறகு தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு ஞானவேல்ராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டது.அப்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், அதன்பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மோகன் ராஜாவின் படத்தை தொடர்ந்து பொன் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் 16-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்கவுள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்தப்படத்தை முடித்த பிறகு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை அஜீத்தை வைத்து ‘விவேகம்’ படத்தை இயக்கி வரும் இயக்குநர் சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.