 June 14, 2017
June 14, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய இசையால் அஜீத்தையே திணறவைத்துள்ளார்.
நடிகர் அஜீத் தற்போது ‘விவேகம்’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை பிரபல ஆடியோ நிறுவனமான சோனி கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம். இதற்காக இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி அஜீத்திடம் கொடுத்தாராம் அனிருத்.
இதில் எந்த தீமை தேர்ந்தெடுப்பது என்று அஜீத்தே திணறினாராம். அந்த அளவிற்கு அனைத்து தீம் மியூஸிக்கும் அஜீத்துக்கு பிடித்திருந்ததாம். கடைசியாக அதில் ஒன்றை தேர்ந்தெடுந்துள்ளார் அஜீத். அந்த தீம் மியூஸிக் தான் விரைவில் சிங்கிள் ட்ராக்காக வெளிவரவிருக்கிறதாம்.