“என்னை அறிந்தால்” “வேதாளம்” மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் “கருப்பன்” ஆகிய திரைப்படங்களின் இளம் வெற்றி தயாரிப்பாளர் “ஐஸ்வர்யா”.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். “ஐஸ்வர்யா” இன்று “கூத்தன்” என்ற திரைப்படத்தில் பாலாஜி இசையில் இரண்டு பாடல் பாடியுள்ளார்.
இது குறித்து அந்த குழுவிடம் கேட்ட பொது, படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள்.இதில் பிரபல நடிகை “ரம்யா நம்பீசன்” ஒரு குத்து பாடல் பாடியது நீங்கள் அறிந்ததே.”ஐஸ்வர்யா” அவர்கள் கர்னாடிக் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் டூயட் பாடி அசத்தியிருக்கிறார்.
முதலில் ஒரு பாடல் பாட வேண்டும் என்று தான் நாங்கள் அழைத்தோம் ஆனால் அவர் அந்த பாடல் பாடிய விதம் குரலின் இனிமை, மெட்டை கற்பூரம் போல் பற்றி கொள்ளும் தன்மை இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும் இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்துப்போனது. மற்றோரு பாடலையும் சேர்த்து இவரே பாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
“கூத்தன்” திரைப்படம் இயக்குனர் “எ.ல்.வெங்கி” இயக்கி புதுமுக நடிகர் “ராஜ்குமார்” நடிப்பில் “நில்க்ரிஸ் முருகன்” தயாரிப்பில் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.
ஐஸ்வர்யா சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் “Oxygen” என்ற தெலுங்கு படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு