May 14, 2018
தண்டோரா குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாகப் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
படபிடிப்பு தளத்தில் அஜீத்துடன் பலரும் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் மதுரையில் இருந்து தல அஜீத்தை பார்க்க ஹைதராபாத் சென்றுள்ளனர்.
ரசிகர்களை பார்த்த அஜீத் ‘‘என்னைய பார்க்கவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள் உங்களுக்கு ஏதாவது ஒண்ணு என்றால் என்னாள் தாங்கி கொள்ள முடியாது. தயவுசெய்து இந்த மாதிரி தவறை இனி செய்யாதீர்கள்’’ ரசிகர்களுக்கு அறிவுரை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அஜித் உடன் புகைப்படம் எடுக்க முன்வந்தபோது அஜிதின் பவுன்ஸர் ரசிகர் ஒருவரை கோபத்துடன் கை நீட்டி பேசியிருக்கிறார். இதனை பார்த்த அஜித் முதலில் அவர்களிடம் கை நீட்டி பேசுவதை நிறுத்துங்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள், அவர்களை திட்டும் உரிமை உங்களுக்கு இல்லை’’ என்று சொல்லிருக்கிறார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.