• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தை தொடர்ந்து சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்த சிம்பு ரசிகர்கள்

January 28, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்.1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், சிம்பு தனது ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு கட் அவுட், பேனர்களுக்கு அண்டாவில் பாலபிஷேகம் செய்யுமாறு ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தங்களது பாச வெறியை வெளிப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் சிம்பு கட் அவுட்டிற்கு அவரது ரசிகர்கள் ஆண்டாவில் பாலபிஷேகம் செய்தனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு ரசிகர்கள் நடுக்கடலிலும் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் பேனரை வைத்து அசத்தியுள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரியில்
நடந்துள்ளது. இதற்கு முன் தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தான் இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடைபெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க