May 10, 2017 
kalakkalcinema.com
                                தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருக்கும். அந்த வகையில் கமல்ஹாசன், விஜய், சூர்யா என பலரின் படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்துடன் எப்போது படம் என கேட்டதற்கு அவர் கூறியதாவது, அஜித் சார் இப்போது கூப்பிட்டாலும் உடனே படம் தயாரிக்க தயார், எல்லாம் கை கூடி வர வேண்டும்.
இது குறித்து ஏற்கனவே அஜித்திடம் பேசியிருக்கிறேன், அதற்கு அவர் நேரம் வரட்டும் கூப்பிடுகிறேன் என்றார். நீண்ட காலம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போதும் அதே பதிலை தான் கூறினார்.
எனவே மீண்டும் மீண்டும் அவரிடம் இதை பற்றி கேட்க முடியாது. அவர் எப்போது கூப்பிடுகிறாரோ உடனே படம் தொடங்கிட வேண்டியது தான் என்றார் உதயநிதி.