தல அஜித் சிறுத்தை சிவா ஹாட்ரிக் கூட்டணியில் வெளிவந்த படம் விவேகம். விமர்சன ரீதியில் இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியல் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் பிறகு அஜித் கையில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அஜித்தின் 58 வது படத்தில் இயக்கப்போவது யார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில், தற்போது ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஷங்கர் – அஜித் கூட்டணியை உருவாக்கியது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான். இருவருக்குமே நண்பர் என்பதால் இக்கூட்டணியை முடிவு செய்துள்ளாகவும் கூறப்படுகிறது.
எனினும், அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கவிருப்பதாகவும், இதற்கான கதை விவாதம் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால்,அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது அவருடைய ஓய்வுக்குப் பிறகு முடிவாகும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு