• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாட்டில் துவங்கியது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

December 12, 2019 தண்டோரா குழு

கல்கி சரித்திர படைப்பு பொன்னியின் செல்வன் நாவல். இதை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தார்.‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். இதுமட்டுமின்றி, பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.இதற்காக தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது.

இந்நிலையில், சத்தமின்றி தாய்லாந்தில் படப்பிடிப்பை துவங்கிவிட்டார் இயக்குனர் மணிரத்னம். தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.இப்படம் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க