July 26, 2019
தண்டோரா குழு
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்தின் வெற்றி தொடர்ந்து இக்கூட்டணி அசுரன் படத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் அன்று வரும் என கூறப்படுகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் வெற்றிமாறன் ‘வடசென்னை 2’ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பரோட்டா சூரியை ஹீரோவாக வைத்து வேறொரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.