 May 8, 2017
May 8, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                அஜித்துடன், ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் விவேக்.
இவர் சமீபத்தில் ‘தல’ அஜித் தனக்கு கொடுத்த பரிசு குறித்து சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூகவளைதளத்தில் ஒரு கதை ஒன்று வேகமாக பரவி வருகிறது. அது ‘தல’ அஜித்துடன் விவேக் காரில் சென்று கொண்டிருந்தபோது, அஜித் கையில் கட்டியிருந்த ’ரோலெக்ஸ் வாட்ச்’ விவேக்கிற்கு மிகவும் பிடித்து போனதாம்.
அந்த வாட்சைப்பார்த்த விவேக், என்னைக்காவது ஒருநாள் தானும் அதே வாட்சை வாங்குவேன் என கூறினாராம். சற்றும் யோசிக்காத அஜித், அந்த வாட்சை கழட்டி விவேக் கையில் அணிவித்ததாகவும், ஒரு செய்தி பரவியது. 
இந்த செய்தி குறித்து ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள விவேக், ‘இந்த விஷயத்தில் உள்ளது போல அந்த நிகழ்ச்சி அப்படியே நடக்கவில்லை. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ‘ரோலெக்ஸ்’ இல்லை, ’சீக்கோ வாட்ச்’. தல அஜித்தின் சிறந்த குணத்துக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.’ என விவேக் தெரிவித்துள்ளார்.