• Download mobile app
23 Oct 2025, ThursdayEdition - 3543
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் வருகிறது புரூஸ்லீயின்வாழ்க்கை வரலாறு படம்

May 9, 2017 தண்டோரா குழு

உலக அளவில் தற்காப்பு கலையில் பிரபலமானவர் புரூஸ்லீ. மேரி கோம், தோனி, சச்சின்ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெற்றிபெற்ற நிலையில் தற்போது புரூஸ்லீயின் வாழ்க்கையும் திரைபடமாகவுள்ளது.

இப்படத்தை பிரபல இயக்குனர் சேகர் கபூர் இயக்கவுள்ளார்.’லிட்டில் டிராகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தின் கதை விவாதத்தில் புரூஸ் லீ-யின் மகள்,ஷேனன் லீ அவர்களும் பங்கெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

1950 -களில் புரூஸ்லீ, ஹாங்காங்கில் அனுபவித்த இளமைக் கால காதல், குடும்பத்தின் ஏமாற்றம், நட்பு, துரோகம் எனப் பல பரிமாணங்களை இப்படம் வெளிக்கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் சேகர் கபூர் கூறியபோது, ”புரூஸ் லீ மிகவும் திறமை படைத்த மற்றும் பிரபலமான தற்காப்புக் கலை வல்லுநர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதைத் தவிர்த்து, புரூஸ் லீ என்பவர் யார் என்ற கேள்வியைத் தேடும் படைப்பாக இந்தப் படம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க