• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் துவங்கும் பிக் பாஸ் 4 -அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு!

August 27, 2020 தண்டோரா குழு

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆண்டு தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன், ஜூலையில் ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்து வந்ததால் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஷூட்டிங்கை விரைவில் தொடக்க சேனல் தரப்பினர் முனைந்துள்ளனர்.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்க விஜய் டிவி நிர்வாகம் தயாராகி வருகிறது. அக்டோபர், நவம்பர் என மூன்று மாதங்களும் இதற்கான முழு வேலைகளையும் முடித்து ஒளிபரப்பையும் நிகழ்த்தி விட வேண்டும் என சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளதாக கமல் பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க