• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்’ படவாய்ப்பை மறுத்துவிட்டேன் – அனுராக் ட்வீட்

March 11, 2019

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீக்க இடம் பிடித்துவிட்டார். இவர் இயக்குவதோடு, பல நல்ல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இதுமட்டுமின்றி எந்த மொழியில் நல்ல வெளியானாலும், அதைப் பாராட்டுவது இவரது வழக்கம்.

தமிழில் சுப்ரமணியபுரம், பருத்திவீரன், நான் கடவுள், வடசென்னை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களை அவர் பாராட்டியுள்ளார். இதற்கிடையில், அவர் சூப்பர் டீலக்ஸ் படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆரண்யா காண்டம் படத்திற்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படமான இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

அனுராக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரெய்லரை ஷேர் செய்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.அப்போது ‘அதற்கு நடிகராகவா?’ என ஒருவர் கமண்ட்டில் செய்திருந்தார், ‘நடிகராக அல்ல, அதில் ஒரு கதையை எழுதுபவராக’ என பதில் தெரிவித்திருந்தார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதையை, தியாகராஜன் குமாரராஜா, நீலன் கே.சேகர், மிஷ்கின், நலன்குமாரசாமி உள்ளிட்டோர் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க