• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டன் காதலனை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் !

April 26, 2019 தண்டோரா குழு

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் 7-ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் வேதாளம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், லண்டனை சேர்ந்த நாடக கலைஞர் மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். காதலன் மைக்கேலை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தந்தை கமலுக்கு ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்திருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்து இருந்தாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது லண்டன் லவ்வருடனான நடிகை ஸ்ருதி ஹாசனின் காதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பிரிவதாக ஸ்ருதியின் காதலர் மைக்கேல் கார்சேல் அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ள மைக்கேல் கார்கேல், இந்த இளம் பெண் (ஸ்ருதி) எப்போது எனது பிரியமான தோழியாக இருப்பார். அவரை நண்பராக பெற்றதை நான் சிறப்பாக உணர்கிறேன். லவ் யு கேல்’ என்று கூறியுள்ளார்.

அதைபோல் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் “மீண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி. இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்” என்று பதிவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மைக்கேலின் புகைப்படங்களை அவர் நீக்கியுள்ளார். இந்த பதிவை பார்த்து ஸ்ருதியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் இருவருக்கும் இடையே லவ் ஏற்படும் என அவர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க