• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகர்களை குஷிப்படுத்திய மோகன்லால் படத்தின் பர்ஸ்ட் லுக்!

July 3, 2017 தண்டோரா குழு

தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் திரைக்கதையில் மோகன் லால் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள படம் ஒடியன். இப்படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எம்.ஜெயச்சந்திரன் இசையமைப்பாளராகவும் ஒளிப்பதிவாளராக ஷாஜி குமார், ஸ்டன்ட் இயக்குநராக பீட்டர் ஹெயின், கலை இயக்குநராக சாபு சிரில் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.

‘ஆசிர்வாத் சினிமாஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் ஃபேன்டஸி த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தினை 3D தொழில்நுட்பத்தில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க