January 29, 2021 
தண்டோரா குழு
                                சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2010-ல் சிம்பு, த்ரிஷா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்ட படம் – விண்ணைத் தாண்டி வருவாயா.இதன் பின் இக்கூட்டணி அச்சம் என்பது மடமையடா படத்தில்
இணைந்தது. 
இந்நிலையில் சிம்புவும் கெளதம் மேனனும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இருவரும் இணையும் மூன்றாவது படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.இந்தப் படம் சிறப்பாக அமையும் எனத் தோன்றுகிறது.இது நடக்கக் காரணமாக இருக்கும் ஐசரி கணேஷுக்கு நன்றி என்று ட்விட்டரில் கெளதம் மேனன் கூறியுள்ளார்.