• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் இணைந்த தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

December 17, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் ஜிவி. பிரகாஷ் குமார். அவரை தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்தபாலன்.

தற்போது அவரை வைத்தே `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். படத்தில் ஒரு பாடலை நடிகை அதிதி ராய் பாடியுள்ளார். இதற்கிடையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 8 வருடங்களாக தனுஷ் – ஜீவி கூட்டணி இணையாமல் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். மேலும் 8 வருடங்களுக்கு பிறகு தனுஷ் என்னுடைய இசையில் பாடியிருக்கிறார் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க