• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்னம், ஷங்கருக்காக ஒன்றிணைந்த 11 இயக்குனர்கள் !

August 25, 2021 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான இயக்குநர் மணிரத்னமும் ஷங்கரும் இணைந்து புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்துக்கு ரெயின் ஆன் பிலிம்ஸ் (Rain On Films) என்ற பெயரை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மூலம் படங்கள், ஓடிடி தளங்களுக்கான தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில்,
இவர்களுடன் மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட 11 பேர் இயக்குநர்களும் இணைந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி இவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். அவர் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர், மணிரத்னம், ஷங்கர் தயாரிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க