• Download mobile app
18 Nov 2025, TuesdayEdition - 3569
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் செல்வனை தொடர்ந்து மக்கள் செல்வி பட்டம் வென்ற நடிகை !

March 5, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை ரசிகர்களும்,திரைத்துறையில் உள்ளவர்களும் பட்டம் கொடுத்து கௌரவிப்பர். அப்படி பட்டம் வைத்து கொண்ட பல நடிகர்,நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் தல, தளபதி,சூப்பர்ஸ்டார், உலக நாயகன், லேடி சூப்பர்ஸ்டார், புன்னகை அரசி இவர்களை தொடர்ந்து தற்போது மக்கள் செல்வி உருவாகியுள்ளார். மக்கள் செல்வன் என்பது விஜய் சேதுபதி என்று அனைவரும் அறிந்ததே. இவருக்கு இந்த பட்டத்தை கொடுத்தது இவரின் இயக்குனர் சீனு ராமசாமி.

இந்நிலையில்,மார்ச் 5ம் தேதியான இன்று தனது 34வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் நடிகை வரலட்சுமி. இந்நிலையில், இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் “டேனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகை வரலட்சுமிக்கு “மக்கள் செல்வி” என்ற பட்டம் வழங்கபட்டுள்ளது.

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன்பின் தாரைத்தப்பட்டை, சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபமாக தான் நடிகைகளுக்கும் லேடி சூப்பர் ஸ்டார், மக்கள் செல்வி போன்ற பட்டங்கள் கிடைக்கப் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க