• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பேட்ட’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றார் பிரித்திவிராஜ்!

December 31, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிதுள்ள இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் இசை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள கடந்த 28ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் வெளியாகும் அன்றைய தினம் இத்திரைப்படம் கேரளாவிலும் வெளியாகிறது. இந்நிலையில், கேரளாவின் வெளியீட்டு உரிமையினை மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் பெற்றுள்ளார்.ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து பிரித்திவிராஜ் தற்போது பிரித்திவி ராஜ் புரடக்சன்ஸ் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தனது ‘நைன்’ திரைப்படத்தினை தயாரித்து வருகின்றார். இதற்கிடையில் தற்போது ரஜினியின் பேட்ட திரைப்பட விநியோக உரிமையினை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் பேட்ட வெளியிடப்படும் எனவும், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஷ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படத்தினை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க