• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ !

June 18, 2021 தண்டோரா குழு

தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம்
ஜகமே தந்திரம். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. எனினும் இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.இருப்பினும் கொரோனா சூழலை மனதில் கொண்டு, இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க