• Download mobile app
23 Oct 2025, ThursdayEdition - 3543
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் சீசன் 4-யை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்! – வதந்திக்கு முற்றுப்புள்ளி

September 21, 2019 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியில் மூன்று சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் குறித்து சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. பிக்பாஸின் அடுத்த சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்பதே.

இதனால் இந்த நிகழ்ச்சியின் 4ம் பாகத்தை யார் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்கிற கேள்வி சமூகவலைதளங்களில் எழுந்தது. இதனை அடுத்து சூர்யா, சரத்குமார்,சிம்பு,ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், இதனை மறுத்து நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது.அதில்
“அடுத்த சீசனுக்கு கமல் தான் தொகுப்பாளர். வேறு யாரிடமும் நாங்கள் பேசவில்லை. வேறு யாரையும் தொகுப்பாளராகக் கொண்டு வரும் எண்ணமுமில்லை” என அந்த அறிவிப்பு கூறுகிறது.

மேலும் படிக்க