March 29, 2017 
tamil.samayam.com
                                பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக, நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை காயத்ரி, நடன இயக்குனராகவும் பிரபலம் பெற்றவர் ஆவார். இவர் அண்மைக்காலமாக, பாஜக.,வில் இணைந்து, அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டிவந்தார். 2016ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாகப் போட்டியிட வாய்ப்பு கேட்டு, காயத்ரி ரகுராம், விண்ணப்பமும் செய்திருந்தார்.
இந்நிலையில், அவருக்கு பாஜக.,வின் தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. கட்சிப் பணிகளில் காயத்ரி ரகுராம் காட்டிவரும் ஆர்வத்தைப் பாராட்டி, அங்கீகரிக்கும் வகையில், இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.