• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிவின் பாலிக்கு ஜோடியான நயன்தாரா

July 8, 2017 தண்டோரா குழு

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றவர் நிவின் பாலி. மலையாளத்தில் பிஸியாகவே இருந்து வரும் இவர் தற்போது ரிச்சி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இதற்கிடையில், இவரது நடிப்பில் வெளிவந்த தட்டத்தின் மறையது படத்தின் 5 ஆண்டு கொண்டாட்டம் கொச்சியில் நடைபெற்றது. அப்போது, நயனதாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள நடிகரும் இயக்குநருமான வினித் ஸ்ரீனிவாசனின் சகோதரர் தயான் இப்படத்தை இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் தமிழ் மற்றும் மலையாள நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளனர்.

நிவின் பாலி தற்போது த்ரிஷாவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க