• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் நடித்த முதல் யூ சர்டிபிகேட் படம் இதுதான் ! – SJ சூர்யா

May 8, 2019 தண்டோரா குழு

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக மான்ஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

மாயா,மாநகரம் படங்களை தயாரித்த Potential ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா,

நெல்சன் கதை கூறிய போது எலியும், நீங்ளும் என்று கதை சொன்னார். அதற்கு நான் பல புலிகளுக்கு வில்லனாக நடித்துவிட்டேன். ஆனால் இப்போது எலிக்கு வில்லனா என்று கேட்டேன். முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் பாலிவுட்டில் வித்யாபாலன் பெரிய நடிகையாக வளர்ந்தார். அதே போல பிரியாவுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.நான் நடித்து யு சான்றிதழ் வாங்கிய முதல் படம் மான்ஸ்டர் என புன்னகையுடன் கூறினார்.

மேலும், மே 17-ம் தேதி படம் வெளியாகும் என்றும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

மேலும் படிக்க