• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நானாக நான்: உலகநாயகனின் ‘பிக் பாஸ்’ புரொமோ!

May 16, 2017 tamilsamayam.com

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக சின்னத்திரையில் தோன்றவிருக்கும் உலக நாயகன், 100 நாட்கள் எந்தவித வெளியுலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் தங்கவைக்கப்படும் 15 நட்சத்திரங்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களை கண்காணிக்கப்போகிறார். விஜய் தொலைக்காட்சி நடத்தும் இந்நிகழ்ச்சியின் புரொமோவை உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான அவரது டுவீட்டில், ‘எனையாளும் அன்பர்களை சென்றடைய இதுவும் ஓர் வழி. விரைவில் உங்கள் அன்பிற்குப் பாத்திரமாக. பாத்திரம் ஏற்காமல் நானாக நான்..’ என டீசரை பகிர்ந்துள்ளார்.

வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்காக சென்னை அருகேயுள்ள ஈபிவி தீம் பார்க்கில் வீடு ஒன்று தயாராகி உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹிந்தியில் இந்நிகழ்ச்சியை பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் 10 சீசன் கடந்து வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க