• Download mobile app
25 Aug 2026, TuesdayEdition - 3849
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேசிற்கு தலைவர் 168 படக்குழு பாராட்டு

December 25, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

இவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க