• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு – உருவாகிறதா மங்காத்தா 2?

March 1, 2019 தண்டோரா குழு

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்தல அஜித், பிரேம்ஜி, வைபோ, அர்ஜுன், மகத் த்ரிஷா, ஆண்டிரியா, ராய் லஷ்மி, அஞ்சலி என பெரும் நடிகர் பட்டாலமே களம் இறக்கிய மாபெரும் வெற்றி படம் ‘மங்காத்தா’. இது தல அஜித்தின் 50வது படமாகும்.

இந்த படத்தில் தல அஜித் சால்ட் அன்ட் பேப்பர் ஸ்டைலில் 5 இளைஞர்களுடன் இணைந்து நடித்திருப்பார். காதல், காமெடி, ஆக்ஷன் என அஜித்தை முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்டைலான கேரக்ட்டராக இந்த படத்தில் பார்க்க முடிந்தது. தல ரசிகர்களிடையேவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பின் தல அஜித் நிறைய படங்கள் நடித்து இருந்தாலும் ‘மக்காத்தா 2′ எப்போது எடுக்கப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையில், அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குநர் வெங்கட்பிரபு ‘மங்காத்தா 2′ எடுக்க நான் தயாராக இருக்கிறேன். மங்காத்தா இல்லையென்றாலும் அஜித்தை வைத்து ஒரு படம் எடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இது நடந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். ஒரு வேலை இவர் “மங்காத்தா 2” அல்லது அஜித்தை வைத்து அடுத்த படத்திற்கு இவர் தயாராகி விட்டாரா என்பது பற்றி இன்னும் தெரியாமல் ரசிகள் குழும்பி போய் உள்ளார்கள். வெங்கட் பிரபு எது நடந்துவிட்டது என்று விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க