உலகின் மூலைமுடுக்கெங்கும் ரசிகர்களை கொண்டவர் சன்னிலியோன். கவர்ச்சி நாயகியாக தொடங்கி பின்னர் பாலிவுட் கதாநாயகியானர். இந்திய சினிமாவில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துள்ளவர் நடிகை சன்னிலியோன்.
பாலிவுட்டில் சினிமாவில் தற்போது முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வரும் சன்னி லியோன் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஜெய்யுடன் ஆடியதன் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து வீரமாதேவி படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார் வி.சி. வடிவுடையான் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.
சன்னிலியோன் சிறந்த டான்சரும் கூட இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார். படப்பிடிப்பு வேலை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வடிவுடையான் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சன்னிலியோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படம் அரசியல் கதையாக உருவாகவுள்ளது எனவும் படத்திற்கு டில்லி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையை கேட்ட உடனேயே சன்னி லியோன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி பெண்ணாக சன்னி லியோனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த கட்டமாக தற்போது இந்த படத்திற்கான துணை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு