• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழரின் அடையாளம் ஜல்லிக்கட்டு: நடிகர் விஜய்

January 18, 2017 tamilsamayam.com

தமிழரின் அடையாளம் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுக்கு தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய் டுவிட்டரில் வீடியோ மூலமாக பதிவிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்திற்கு சினிமா, அரசியல், விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோலிவுட்டின் பிரபல நடிகரான விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறும்போது, ” தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டு. எதையும் ஏதிர்பார்காமல் , யாருடைய தூண்டுதலும் இன்றி , எந்த விதமான கட்சி பேதமும் இன்றி தமிழன் என்ற அடிப்படையில் தாமாக முன்வந்த இளைஞர்களின் பார்த்து தலைவணங்குகிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி கைதானவர்களை விடுதலை செய்யவேண்டும், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.”என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க