• Download mobile app
11 May 2026, MondayEdition - 3743
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷின் ‘வி.ஐ.பி- 2’ ஜூலை 14ல் ரிலீஸ்!

March 23, 2017 tamilsamayam.com

தனுஷ் நடிப்பில் உருவான ‘வேலையில்லா பட்டதாரி -2’ படம் ஜூலை 2ம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் பிஸியான நடிப்புக்கு இடையே ‘பவர் பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். தற்போது ‘பவர் பாண்டி’ பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்தார் தனுஷ்.

இந்தப் படத்தை சௌந்தர்யா தனுஷ் இயக்குகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தின் டீசர் மே மாத இறுதியில் வெளியாகிறது. மேலும் ‘வேலையில்லா பட்டதாரி – 2’ படம் ஜுலை 14ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க