April 29, 2019
தண்டோரா குழு
‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் அசுரன். கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்தின் படப்படிப்பு முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ புத்தகத்தை தழுவிய இந்த கதையில், இடத்தை கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், வில்லனாக ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.