• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி!

December 8, 2020 தண்டோரா குழு

இந்திய அளவில் ரீட்வீட்டில் விஜய் பதிவிட்ட ட்வீட் முதலிடம் பிடித்ததாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 12 தேதி வரை விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றது. இதற்கிடையில்,வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் விஜயை காண படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது வெளியில் வந்த விஜய் வேனுக்கு மேல் ஏறி தன்னைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதனை தான் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், இந்த செல்பி 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனை டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

மேலும் படிக்க