• Download mobile app
02 Oct 2023, MondayEdition - 2791
FLASH NEWS
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
  • முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி

ஜி.வி.பிரகாஷுடன் ஜோடியாக நடிக்க குவியும் கல்லூரி மாணவிகள் அப்ளிகேஷன்

June 16, 2017 தண்டோரா குழு

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஹீரோ ஆன பின்பு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தன் கவசம் பல படங்களை வைத்துள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன “100% லவ்” என்ற படத்தின் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா முதல் பல நாயகிகளிடம் பேச்சுவார்த்தை பேச்சு நடந்தது.

தற்போது, படக்குழு புது முகத்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் உள்ள இளம்பெண்கள் படக்குழுவினர்களை அணுகலாம் என்று விளம்பரப்படுத்தி ஒரு இமெயில் முகவரியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த இமெயில் முகவரிக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதில் பாதிக்கு மேல் கல்லூரி மாணவிகளின் அப்ளிகேஷன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க