• Download mobile app
25 Jan 2026, SundayEdition - 3637
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனா திரைப்பட விழாவில் தனுஷின் வடசென்னை !

October 4, 2018 தண்டோரா குழு

பொல்லாதவன், ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வடசென்னை.

கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாகுமாம்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சமீபத்தில், படத்தின் பார்ட் 1-க்கான ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படம் சீனாவில் நடைபெறவிருக்கும் பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விழா வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாம். அதில் 3-வது நாளில் இந்த படம் திரையிடப்படுமாம்.

மேலும் படிக்க