 April 12, 2019
April 12, 2019  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.  
அவரது இரண்டாவது மகனான குறளரசன் இவர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். குறளரசன்  தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாத்துக்கு மாறினார் குறளரசன். இவர்களுடைய திருமண வரவேற்பு, வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் நடைபெறுகிறது. தற்போது குறளரசனின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக டி.ராஜேந்திரன் பல்வேறு பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார். இந்நிலையில், டி ராஜேந்தர் நடிகர்கள்  சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை தனது இளைய மகன் குறளரசனுடன் அவர்களது இல்லத்தில் சந்தித்தார். பின்னர், தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர்களுக்கு நேரில் வழங்கினார்.