December 20, 2021
தண்டோரா குழு
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில்
‘வெந்து தணிந்தது காடு’, மற்றும்
‘பத்து தல’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார்.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியான நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.‘கொரோனா குமார்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளார்.
இவர் தற்போது கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.