சுந்தர்.சி அரண்மனை 2 படத்திற்கு பிறகு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, ஜெயம் ரவி, சுருதி ஹாசன் ஆகியோரை வைத்து சங்கமித்ரா படத்தை இயக்கவுள்ளார்.
இரண்டு முன்னணி ஹீரோக்களுக்கு இணையான டைட்டில் கேரக்டரில் ஸ்ருதி நடிப்பதால், கடந்த சில நாட்களுக்கு முன்பே லண்டனில் பிரத்யேகமாக வாள்சண்டை பயிற்சி கற்றுக் கொண்டார்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகவிருக்கும் இதற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ‘24’ புகழ் திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளாராம்.படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஏற்கெனவே துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இன்று (மே 17-ஆம் தேதி) முதல் ஃபிரான்ஸில் நடைபெறவுள்ள கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்-யில் படத்தின் அறிமுக விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளது படக்குழு.
இந்நிலையில்,தற்போது இந்த படத்தின் போஸ்டர் ஒன்று இணைய தளங்களில் வெளிடப்பட்டுள்ளது. அது சமூக வலைத்தளங்ககளில் பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு