 June 3, 2017
June 3, 2017  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் தமிழில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘சங்கமித்ரா’.
இதில், ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாகவும் சுருதிஹாசன் நாயகியாகவும் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இளவரசியாக நடிக்க இருந்த சுருதிஹாசன் லண்டனில் வாள் பயிற்சி பெற்றார். 
ஆனால், கதையின் முழு விவரத்தை தெரிவிக்கவில்லை. கால்ஷீட் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து சுருதிஹாசன் விலகி விட்டார்.
இதையடுத்து இளவரசி கதாபாத்திரத்தில் அவருக்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது.
தற்போது அந்த வேடத்தில் ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், ஹன்சிகாவுடன் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே ‘சங்கமித்ரா’ படத்தின் இளவரசியாக ஹன்சிகா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.