• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தடம் படக்குழு !

March 8, 2019 தண்டோரா குழு

தடையற தாக்க படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இரண்டாவது முறையாக் நடித்துள்ள படம் தடம். இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், தடம் படக்குழு தமிழகம் முழுவதும் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

இதன்ஒரு பகுதியாக கோவைக்கும் வந்தனர். நேற்று கேஜி தியேட்டரில் தடம் படத்தின் இரவுக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் அருண்விஜய், நடிகைகள் தன்யா ஹோப், ஸ்மிருதி ஆகியோர் ரசிகர்களுக்கு தெரியாமல் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர். படத்தின் இடைவெளி விட்டதும் பார்வையாளர்கள் போல் படக்குழுவினரும் வெளியே வந்தனர். இவர்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பின்னர் படகுளுவினருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் திரை முன் ரசிகர்கள் மத்தியில் பேசிய அருண்விஜய்,

நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு கிடைத்துக்கொண்டே தான் இருக்கிறது. நல்ல படங்களை மக்கள் கைவிட்டதும் கிடையாது. நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் மேலும் என்னை இது போன்ற படங்களை எடுக்க தூண்டுகிறது. நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பேன் எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட அருண் விஜய் ரசிகர் மன்ற தலைவர் VT அருண் குமார், பொள்ளாச்சி ரசிகர் மன்ற தலைவர் வெண்ணிலா ரவிக்குமார் வெண்ணிலாவின் திரைக்களம் குழுவினர். அருண்விஜய் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க