• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோமாளி படத்தில் இருந்து ரஜினி குறித்த காட்சிகள் நீக்கப்படும் தயாரிப்பாளர் அறிவிப்பு..!

August 5, 2019 தண்டோரா குழு

கோமாளி படத்தில் இருந்து ரஜினி குறித்த காட்சிகள் நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் உறுதி அளித்துள்ளார்.

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரில் நடிகர் ரஜினி அரசியல் வருகை குறித்து கிண்டல் செய்யும் விதத்தில் சில காட்சிகள் இடம்பெற்று உள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து
வருகின்றார். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தயாரிப்பாளர் ஐசரி கணேசை தொலைபேசியில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அந்த காட்சிகளை நீக்கும் படி கேட்டு கொண்டுள்ளார்.
இதற்கிடையில்,கோமாளி படத்தில் இருந்து ரஜினி அரசியல் குறித்த காட்சிகளை நீக்குவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ‘கோமாளி’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இன்று (ஆகஸ்ட் 5) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில் “ரஜினி தொடர்பான காட்சிக்கு கமல் அவர்கள் தொலைபேசியில் அழைத்து தனது அதிருப்தியைச் சொன்னார். அவர் கூற்றுப்படி காட்சி எண்ணத்தை உருவாக்குவதாக இருந்தால் கண்டிப்பாக அந்தக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிடுகிறேன் என்று கூறியிருந்தேன். மேலும், ரசிகர்கள் தொடர்ச்சியாக அந்தக் காட்சிகளை நீக்குமாறு கேட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்திலிருந்து அந்தக் காட்சிகளை நீக்கிவிடுகிறோம். ரஜினிகாந்த் எனது நெருங்கிய நண்பர். அவர் நடித்த ‘2.0’ படத்தில் இணைந்து நடித்துள்ளேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவருடைய பெயருக்கும் புகழுக்கும் என்ன இழுக்கு வந்தாலும் தாங்கிக் கொள்ள மாட்டேன். இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ப்ரதீப், ஜெயம் ரவி ஆகியோரிடமும் பேசிவிட்டேன்” என்று ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க