July 29, 2019
தண்டோரா குழு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான ‘கே.ஜி.எப்’ திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியது.
இப்படத்தின் முதல் பாகத்தில் தங்கச்சுரங்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த மக்களை மீட்டு தங்கச்சுரங்கத்தை தன்னுடைய கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறார் ஹீரோ யாஷ். பின்னர் மிகப்பெரிய டானாக அவர் எவ்வாறு மாறினார் என்பதே இரண்டாம் பாகம்.முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக சஞ்சய் தத் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர் ஆதிரா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.