• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குத்து சண்டை வீராங்கனையாக த்ரிஷா !

August 5, 2017 தண்டோரா குழு

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகை த்ரிஷா பிஸியாக இருந்து வருகிறார் தற்போது அவர் சாமி 2, சதுரங்கவேட்டை 2, மோஹினி, 96 உள்ளிட்ட 8 படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் த்ரிஷாவின் படங்களில் நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதற்க்கிடையில் த்ரிஷா பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் விரலாக பரவி வருகிறது.

தனது அடுத்த படத்தில்பாக்ஸராக நடிப்பதற்காக அவர் இந்தப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறாராம்.

பாக்ஸிங் வீராங்கனையான மேரிகோம் வாழ்க்கையை மையப்படுத்திய ஹிந்தி படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் த்ரிஷா நடிக்க இருக்கிறாராம்.

நிஜ குத்துச்சண்டை வீராங்கனையாக பிரதிபலிக்க வேண்டும் என்கிற ஆவலில் த்ரிஷா குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க