June 6, 2017
tamilsamayam.com
ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் நடிகர் தனுஷும் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா கரிகாலன். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ப.பாண்டி படத்தில் ராஜ்கிரணுக்கு இளம் வயது வெர்ஷனாக எப்படி தனுஷ் நடித்தாரோ, அதேபோன்று காலா படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் இளவயது ரஜினியாக தனுஷ் நடிப்பார் என்ற பேச்சும் அடிபடுகிறது. தனுஷைத் தொடர்ந்து மம்மூட்டியும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.