July 19, 2019
தண்டோரா குழு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ‘போட்ட’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக
நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு பேட்ட படத்தில் ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
தற்போது இந்த படத்தை இயக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இப்படத்தில் இணையவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்து விரைவில் செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.