March 15, 2021
தண்டோரா குழு
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்தின் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதற்கிடையில், வலிமை படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.ஆனால், தயாரிப்பு தரப்போ படம் குறித்த எந்த அப்டேட்டையும் இதுவரை வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது.
இந்நிலையில்,வலிமை’படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில்… “திரு. அஜித் குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி முதல் ‘வலிமை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பர பணிகள் தொடங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.