• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் – விஷால் வெளியிட்ட வீடியோவிற்கு வரலட்சுமி கண்டனம்

June 14, 2019

நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வரும் ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறது. அவர்களை எதிர்த்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களமிறங்கியுள்ளது.

இதற்கிடையில், நடிகர் சங்கத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்ததாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். விஷால் வெளியிட்டுள்ள இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வரலட்சுமி, தமது தந்தை சரத்குமார் குறித்து தவறான தகவல்களை விஷால் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது. எனது வாக்கை இழந்து விட்டீர்கள் என கூறி உள்ளார்.

மேலும் படிக்க