• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் !

June 29, 2019 தண்டோரா குழு

இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஏ.எல்.விஜய். அதன் பின் கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்க்கியுள்ளார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களாக அமைந்தன. இவர் 2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்டார்.

மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர். நடிகை அமலா பால் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கிடையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்குவதற்கு ஏ.எல். விஜய் ஆயத்தமாகி வருகிறார். இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.

இந்நிலையில், பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட ஏஎல்.விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகளான மருத்துவர் ஐஸ்வர்யாவை விஜய் திருமணம் செய்யவுள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய், மருத்துவர். ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க