• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியில் 3 ஆக்ஷன் கதைகள் ரெடி ஒகே சொல்வாரா அஜித் – காத்திருக்கும் பிரபல தயாரிப்பாளர்!

April 11, 2019 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து தல அஜித் தற்போது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இப்படம் இந்தியில் ஹிட்டடித்த பிங்க் படத்தின் ரீமேக்காகும். இதில் அமிதாப் நடித்த வேடத்தில் அஜித் நடித்து வருகிறார். ஆகஸ்டில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் படத்தின் சில காட்சிகளை அதன் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் பார்த்துள்ளார். இதில் அஜித்தின் நடிப்பு போனியை மிரண்டு போகச் செய்துள்ளது.

இதன்பின் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘நேர் கொண்ட பார்வையின் சில காட்சிகளை பார்த்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. அஜித்தின் நடிப்பு பிரமாதம். அவர் இந்தியில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றிலாவது நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

போனியின் அடுத்த படத்திலும் அஜித் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அந்தப் படம் 2020 ஏப்ரல் 10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க