வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு தன் உடல் எடையை குறைப்பதற்காக லண்டனில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
அப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கிடையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் முன்னணி வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைபோல் சிம்பு ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு